| Diocesan Shrines |
| புனித அந்தோணியார் திருத்தலம், விருதுவிளங்கினான் |
| பங்கின் வரலாற்றுப் பின்னணி |
| 1. புதுவை மறைமாவட்டத்திலிருந்து வேலூர் மறைமாவட்டத்தில் இணைந்த விதம் |
| புதுவை மறைமாவட்ட அத்திப்பாக்கம் பங்கின் கிளைப்பங்காக இருந்த விருது விளங்கினான் 1969 இல் மறைமாவட்டம் மாவட்ட வாரியாக பிரிக்கும் போது பாண்டி மறைமாவட்டத்திலிருந்து வேலூர் மறைமாவட்டத்தில் இணைக்கப்பட்டது. |
| 2. 1970 இல் தனிப்பங்கும் ஆலயம் உருவானவிதமும் |
| விருதுவிளங்கினான் வேலூர் மறைமாவட்டத்தில் இணைந்ததும் இவ்வூர் தனிப்பங்காக அமைந்தது. இப்பங்கிற்கு முதல் பங்கு குருவாக அருட்திரு. நம்பிக்கைராஜ் அடிகள் அவர்கள் பொறுப்பேற்று பணியை தொடங்கினார். |
| 3. காட்டுக்கோயில் புனித அந்தோனியார் மக்களிடையே பரவிய விதம் |
| திருவண்ணாமலையிலிருந்து திருக்கோயிவிலூர் செல்லும் நெடுஞ்சாலையில் 27 கி.மீ. தொலைவிலும் அவ்வாறு திருக்கோயிவிலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் 12 கி.மீ தொலைவில் காட்டுக்கோயில் அமைந்துள்ளது. இக்காட்டுக்கோயிலிலிருந்து கிழக்கு நோக்கி 2.5 கி.மீ தொலைவில் விருதுவிளங்கினான் அமைந்துள்ளது. இவ்வூருக்கு முதலில் சாலை வசதி இல்லை. பொருப்பேற்ற தந்தை நம்பிக்கை ராஜ் அடிகளார், சாலை வசதிகளை அமைத்தார். இவ்வூருக்கு வழி காட்டியாக பிரிந்து செல்லும் சாலையின் ஓரமாக 1சென்ட் இடம் வாங்கி வழிகாட்டியாக அங்கு திருச்சிலுவை நட்டார். நாளடைவில் மாடுமேய்க்கும் பிள்ளைகள் திருச்சிலுவையை உடைத்த காரணத்தினால் அந்த இடத்தில் கல்தூண் எழுப்பி புனித அந்தோணியார் சுருபத்தை நியமனப்படுத்தினார். அவ்வழியே போகும் மக்கள் கோடி அற்புதரின் சுருபத்தில் விளக்குகள் ஏற்றி ஜெபங்கள் செய்து பக்திகளை வெளிபடுத்தி புதுமைகளைப் பெற்று சென்றனர். அதன் பிறகு மக்களிடையே காட்டுக் கோவில் அந்தோணியார் என்று பரவ ஆரம்பித்தது. அதன் பிறகு நான்கு திசைகளிலும் புனித அந்தோணியாரை தரிசிக்க மக்கள் நாடி வர தொடங்கினார்கள். |
| 4. புதிய ஆலயம் தோன்றிய விதம் |
| 1970 ஆம் ஆண்டு பழைய சிறிய ஆலயத்திற்கு பதில் முற்றிலும் புதிய முறையில் கற்களால் பெரியதொரு ஆலயம் கட்டவும் கன்னியர் மடமும் பங்கு தந்தை இல்லமும் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது |
| 5. 1976 இல் திருத்தலம் திறப்புவிழா நடைப் பெற்ற விதம் |
| இவ்வாலயம் வியப்பிற்குரிய வண்ணமும் கற்களால் கலைச்சிறப்பும் தனித் தன்மையும் வாய்ந்த புனித அந்தோணியார் பெயரில் பெரியதொரு ஆலயமும் கன்னியர் இல்லமும் பங்குத் தந்தை இல்லமும் வேலூர் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணிமுத்து ஆண்டகையால் திறப்புவிழா நடைபெற்றது. அதில் நம் பங்கில் பணிபுரிந்த முன்னாள் குருக்களும் மற்றும் ஏனைய குருக்களும் கன்னியர்களும் பக்தர்களும் ஊர்பொதுமக்களும் கலந்துக்கொண்டு மிக சிறப்பாக திறப்பு விழா நடைபெற்றது. |
| 6. பக்தர்களுக்கு குறை தீர்க்கும் திருத்தலம் |
| 1977 ஆம் ஆண்டு ஜீன் 13 ம் நாள் புனித அந்தோணியார் ஆலயம் எழுந்த முதல் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காட்டுக்கோவிலில் புனித அந்தோணியார் சுருபம் இவ்விழாவின்போது புதுப்பிக்கப்பட்டது. இலை மறை காயாக இருந்த காட்டுக் கோவில் 1979 இல் புனித அந்தோணியார் திருத்தலமாக மாறியது. மாறிய காரணத்தினால் நான்கு திசைகளிலிருந்தும் மக்கள் திருத்தலத்தை நாடிவர தொடங்கினர். |
| 7. புதுமைகள் செய்யும் செவ்வாய் விழா |
| செவ்வாய் கிழமைகளில் காட்டுக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஜெபத்திலும் தபத்திலும் பக்தி சூழ்நிலையில் உருவாக்குவதோடு நவ நாள் பிராத்தணையும் நிகழ்த்துவதோடு நூற்றுக்கணக்கான மக்கள் ஜெபத்தில் வாரந்தோறும் ஆர்வத்தோடு நவநாளில் பங்கெடுத்து புதுமைகளைப் பெற்று செல்கிறார்கள். |
| 8. பங்கின் சிறப்பு |
| ஆண்டுதோறும் ஜீன் 13ம் தேதி புனிதரின் ஆடம்பர தேர்விழா கொண்டாடப்படுகிறது. இப்பங்கில் மாதத்தில் முதல் செவ்வாய் மிகவும் சிறப்பு வாய்ந்தது. திங்கள் இரவு சிறப்பு வாய்ந்த குணமளிக்கும் நற்செய்தி கூட்டமும் திவ்ய நற்கருணை ஆராதனையும் நடை பெறுகிறது. காலையில் 5.00 மணிக்கு திருப்பலியை கண்டு புனிதரின் ஆசிரைப் பெற்று செல்கின்றனர். காட்டுக்கோவிலில் செவ்வாய் கிழமைகளில் காலை 8.30 மணியளவில் திருப்பலியும் அதனை தொடர்ந்து குணமளிக்கும் நவநாள் ஜெப வழிபாடுகளும் பக்த சபைகள் ஒன்று சேர்ந்து திருத்தலத்தின் வளர்ச்சிக்கும் ஆன்ம காரியங்களுக்கும் பங்கு தந்தையர்க்கு உதவி செய்கிறார்கள். |
| |
| |